தீபம் ஏற்றும் விளக்குகளில் குபேரனின் மனைவியும், செல்வத்தை வாரி வழங்குபவளுமான சங்க நிதி வசிப்பதாக ஐதீகம்.
ஞாயிறு, திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே விளக்கை துலக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை விளக்கை துலக்கி தீபம் ஏற்றினால் கண் நோய்கள் அகலும் !!
திங்கட்கிழமை சுத்தம் செய்து தீபம் ஏற்றினால் மனதில் அமைதி ஏற்படும் !!
வியாழக்கிழமை சுத்தம் செய்து தீபம் ஏற்றினால் குருவின் அருள் பார்வை கிடைக்கும் !!
சனிக்கிழமை விளக்கை சுத்தம் செய்து தீபம் ஏற்றினால் சாலை பயணத்தில் பாதுகாப்பு ஏற்படும் !!
ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை ஏற்றுவது மிகவும் நல்லது. இந்த உலகுக்கு அடிப்படையாக நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என ஐந்து பூதங்கள் உள்ளன. இவை அனைத்தும் விளக்கின் ஐந்து முகங்களாக கருதப்படுகிறது.

No comments:
Post a Comment