ஒவ்வொரு வருசமும் , ஏன்டா இமானுவேல் பிறந்த நாள் வந்தது , முத்து
இராமலிங்கனார் பிறந்த நாள் வந்தது ன்னு நான் யோசிக்கும் அளவிற்கு எதாவது
ஒரு ஜாதி ரீதியான எரிச்சல் இருக்கும் . !. இந்த வருஷம் கொஞ்சம் different'a
ஏன்டா அம்பேத்கர் நினைவு நாள் வந்ததுன்னு யோசிக்கும் அளவிற்கும்
முன்னேறிட்டோம் எனலாம் .
இங்க பொது நன்மைக்க எவன் ஒருவன்
பாடுபட்டாலும் அவன வருங்காலத்துல வர நார பயலுக ஜாதி சங்க தலைவராக மாத்தி
வச்சு அழகு பாக்குறது வழக்கம் !..
வடிவேலு சொல்ற மாறி இரநூறு
வருடம் கழித்து பார்க்கும் மடையர்களுக்கு இது தெரியவா போகுது ?... ன்னு
சொல்லற மாறி ., எதையும் முழுசா தெரிஞ்ச மாறி சில பன்னாடைங்க அம்பேத்கர
பத்தி தவற எழுதிய விசியங்களும் புரிந்து வைத்து இருக்கும் விதமும் பத்தி
நான் பார்த்தது ..
ஒரு அர வேக்காடு எழுதுது ,
"ஜாதி ஒழிய காரணம்னு சொல்றாங்க ஆனா அமேத்கர் கொண்டு வந்த ஜாதி இட ஒதுக்கீடு தான் , ஜாதி பாகுபாடிற்கு முக்கிய காரணம் "
அட அர வேக்காடு ,
"ஒரு
கால் ஓடிந்தவனுக்கு நடக்க கைத்தடியும் , இரண்டு கால் ஓடிந்தவனுக்கு நடக்க
wheel chair-ம் கொடுப்பது போல தான் இட ஒதுக்கீடு என்பது .. அவன் தானாக
நடக்கும் போது அரசியலமைப்பில் உள்ளது போன்று அந்த ஊன்று கோள் தானாக விலக்கி
கொள்ளப்படும் ... இட ஒதுக்கீட்டால் ஜாதி பாகுபாடு ஒழியுமே தவிர
அதிகரிக்காது ! "
தென் மாவட்டத்தில் சில சமுகம்
முதலில் sc இல் இருந்தது , பின் 80 களுக்கு பின்m. b.c ஆனது . இப்போ b.c
இல் உள்ளது . (கல்வி பொருளாதாரம் , கணக்கெடுப்பு வைத்து சாதியன் இட
ஒதுக்கீடு மாறும் .) ....
இன்னொரு ஜீவி சொல்லுது
"எல்லா ஜாதியும் சமம்ன்னு சொல்லிட்டு , அப்பறம் எதுக்கு ஜாதி பாகுபாடு பார்த்து இட ஒதுக்கீடு அம்பேத்கர் கொண்டு வந்தார் "
சுத்த அர்த்த கெட்டவன இருக்கியே !... பேப்பர் ல , சோறு , கொழம்பு, பொரியல் ன்னு எழுதி வச்சா , பசி தீந்துறும்மாய ?
அது போல ,சும்மா எல்லா ஜாதியும் சமம் சமம்னா, எப்படியா ஒண்ணாகும் ?.. உன்கிட்ட பரம்பர சொத்து இருக்கு , அவன்கிட்ட என்ன இருக்கு ? ..
அதனால தான் கல்வி பொருளாதராம் , இந்த இரண்டிலும் வர வரைக்கும் இந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு ஒரு help அவ்வளவு தான் .
மத்திய
அரசின் கீழ் கணவன் மனைவி , வேலையில் இருந்தால் அவர்கலுடைய வாரிசு அந்த இட
ஒதுக்கீடை பயன்படுத்த முடியாது ... இத போல மாநில அரசும் விரைவில் கொண்டு
வர போகுது . !
இன்னொன்னு எழுதுது "ஜாதி எதிர்ப்பு பேசுற அம்பேத்கர் தான் முதல ஜாதி பாக்குறாரு "
ஏன்ப்பா !.. உன் வுட்டுல , கை ஒடுஞ்ச ஒருத்தனையும் , நல்ல இருகரவனையும் ஒன்னவா பார்பீங்க ?.. .. சுத்த பைத்திய காரண இருக்கியா ....
"அம்பேத்கர் தான் அரசியலமைப்பு சட்டத்தை நிறுவினார் என்று சிலர் சொல்லுகிறார்கள் !... இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு தனிமனிதனால் இயற்றப்படவில்லை , அதை தயார் செய்தது ஒரு வரைவு குழு அதில் அம்பேத்கரும் ஒருவர் அவ்வளவே "
ஏன்டா டுபாகுரு ,
ஒரு ஹோட்டல் கடையுள சாப்பாடு நல்லா இல்லேன்னா , "அந்த ஹோட்டல் சமையில்கார் சரி இல்லனா சொல்லு வீங்க ?..
"ஒரு அமைச்சரவை கொண்டு வந்த திட்டத்திற்கு அந்த மந்திரியவா பாராட்டு வீங்க ?.. .2g ஊழல் பண்ணுன குற்ற சாட்டு ராஜா மேல வந்தபோ
யாரடா திட்டுநீங்க ?..
இந்திர
காந்தி , இலங்கையில் போரை நிறுத்த நரசிம்ம ரவ்வை அனுப்பிய வரலாறில்
எதுக்குடா , செய்தி சொன்ன நரசிம்ம ராவை விட்டுட்டு , இந்திரா காந்திய
பாராட்டுனீங்க ?..
அது சரி , எங்கையோ வட மாநிலத்தில்
பொறந்த ஒரு தலைவனை , பறையன் , ஆதிதிரவிடன்னு பல்ல ன்னு பாகுபாடு
இல்லாம ஒரு அனில அம்பேத்கர் சிலைக்கு க்கு மால போடுறானே , அது போல ஆதிக்க
ஜாதில வந்த தலைவர்கள் எல்லாருக்கும் நீங்க ஒன்னா மாலை போட்டு
கொண்டாடுவீங்களா ?
நான் உங்களுக்கு எல்லாம் ஒரு
விசியத்த சொல்ல விரும்புகிறேன் . ஒரு சமுகம் கல்வி, பொருளாதார ரீதியாக மேல
வந்து விட்டால் அவருகளுக்கு இட ஒதுக்கீடு , சுழற்ச்சி அமையும் . கடந்த
முப்பது வருடங்களில் m.b.c-இல் இருந்து சில சமுகம் b.cக்கும் , o.c இல்
இருந்து b.c க்கும் மாறி இருக்கிறது . இது சிலருக்கு தெரியாது . இன்னும்
ஒரு தலைமுறை கடக்கும் பொது நாம் அனைவுரும் o.c இல் தான் வருவோம் .).. இது
தான் அரசியலமப்பு சட்டத்தில் உள்ள விசியம்...

No comments:
Post a Comment