தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 மாணவர்கள் தேர்ச்சி ஆனார்கள். இது 85.9 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ- மாணவிகளில் மாநில அளவில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி கே.ரேகா முதல் இடத்தை பிடித்தார்.
அவர் 1200-க்கு 1190 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் 4 பாடங்களில் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளார்.
அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் – 195; ஆங்கிலம் – 195; இயற்பியல் – 200; வேதியல் – 200; உயிரியல் – 200; கணிதம் – 200; மொத்தம் – 1190
மாநிலத்தில் இரண்டாவது இடத்தை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள பாரதி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் எஸ்.வேல்முருகன் பெற்றுள்ளார்.
அவர் 1200-க்கு 1187 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் – 194 ஆங்கிலம் – 194 இயற்பியல் – 200 வேதியல் – 200 உயிரியல் – 199 கணிதம் – 200 மொத்தம் – 1187
3-வது இடத்தை தலா 1186 மதிப்பெண்கள் எடுத்து 4 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் விவரம் வருமாறு:-
1. டி.வித்யா சகுந்தலா, எஸ்.ஜே.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, மகராஜா நகர், நெல்லை.
அவரது மதிப்பெண்கள் :-
தமிழ் – 195 ஆங்கிலம் – 193 இயற்பியல் – 200 வேதியல் – 200 உயிரியல் – 200 கணிதம் – 198; மொத்தம் – 1186
2. என்.ரகுநாதன், டி.எம்.எச்.என்.யூ. மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி, முத்து தேவன்பட்டி, பெரியகுளம்.
அவரது மதிப்பெண்கள்:-
தமிழ் – 196 ஆங்கிலம் – 191 கம்ப்யூட்டர் சயின்ஸ் – 200 பொருளியல் – 200 காமர்ஸ் – 200 அக்கவுண்டசி -199 மொத்தம் – 1186
3. பி.சிந்துகவி, குறிஞ்சி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ் – 196; ஆங்கிலம் – 190; இயற்பியல் – 200; வேதியல் – 200; உயிரியல் – 200; கணிதம் – 200; மொத்தம் – 1186
மாணவி சிந்து கவியும் 4 பாடங்களில் 200-க்கு 200 எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
4. பி.எஸ்.ரேகா, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன், ஓசூர்.
அவரது மதிப்பெண்கள்:-
தமிழ் – 192 ஆங்கிலம் – 195 இயற்பியல் – 200 வேதியல் – 199 உயிரியல் – 200 கணிதம் – 200 மொத்தம் – 1186
No comments:
Post a Comment